கோலாலாம்பூர்: மலேசியாவில் கொலை செய்யப்பட்ட மங்கோலி யப் பெண் அல்டன்டுயாவின் வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்கக் கோரி கோலாலம்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காவல் துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். விளம்பர அழகி அல்டன்டுயா 2006ஆம் ஆண்டு கொலை செய் யப் பட்டதற்கான காரணம் என்ன, அந்தப் பெண்ணைக் கொலை செய்ய இரு போலிஸ் அதி காரிகளுக்கு உத்தரவிட்டது யார் என்பதை அறிய போலிசார் விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் நேற்று போலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
'அல்டன்டுயா கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும்'
1 mins read

