கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியம் உள்ளது

கிம்முடன் பேச்சுவார்த்தை நடத்த சாத்தியம் உள்ளது

1 mins read

வா‌ஷிங்டன்: வடகொரியத் தலைவருடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தற்போது திட்டமிட்டபடி வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி பேச்சுவார்தை நடப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னும் ராணுவ பாதுகாப்பு மிகுந்த எல்லைப் பகுதியில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர். தடைபட்ட சந்திப்பு திட்டமிட்டபடி நடப்பதற்கான வழிகள் குறித்து அவ்விருவரும் கலந்து ஆலோசித் ததாக தென்கொரிய தகவல் தெரிவித்தது.

மேலும்