டாக்டர் மகாதீர்: 2வது தடவை பிரதமரானது கடினமான ஒன்று

டாக்டர் மகாதீர்: 2வது தடவை பிரதமரானது கடினமான ஒன்று

1 mins read

மலேசியாவில் இரண்டாவது தட வையாக பிரதமராகி இருப்பது கடினமான ஒன்று என்று டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்து இருக்கிறார். 'தி எட்ஜ்' வார இதழுக்கு பேட்டி அளித்த அவர், 1981ல் பிரத மராக தான் முதல்முறை பதவி ஏற்றபோது எல்லாம் எளிதாக இருந்தது என்றார். அப்போது அரசாங்கத்தில் மாற்றம் இல்லை என்றார் அவர். ஆனால் இப்போது புதிய அரசாங்கத்தை, புதிய கொள்கை அறிக்கை யுடன் அமைக்கவேண்டி இருப்ப தால் எல்லாம் சவால்மிக்கதாக தெரிவதாக அவர் கூறினார்.

மேலும் செய்திகள்