சந்திரனில் காலடி பதித்தவர் காலமானார்

சந்திரனில் காலடி பதித்தவர் காலமானார்

1 mins read
7e7ef84a-2015-409a-8a75-b8479f531fba
-

சந்திரனில் முதல் முறையாக மனி தர்கள் காலடி பதித்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வில் பங்கேற்ற விண்வெளி வீரரான ஆலன் பீன் காலமானார். அவருக்கு வயது 86. ஒரு வாரகாலமாக நோய்வாய்ப் பட்டிருந்த ஆலன் பீன் சனிக் கிழமையன்று ஹூஸ்டனில் உள்ள வீட்டில் காலமானார் என்று அவ ரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. சந்திரனில் இறங்கி நடந்த வர்களில் நான்காவது நபர் ஆலன் பீன். 1963ல் நாசா எனும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையம் தேர்வு செய்த தலைசிறந்த விண் வெளி வீரர்களில் ஆலன் பீனும் ஒருவர். இரு முறை அவர் விண் வெளிக்குப் பயணம் செய்துள்ளார். 1969ல் சந்திரனில் தரையிறங்கிய அப்போலோ-12 குழுவில் அவர் இடம்பெற்றுது முதல்முறை.

விண்வெளி வீரர் ஆலன் பீன், சந்திரனில் முதல் முறையாக இறங்கி நடந்தவர்களில்(வலம்) ஒருவர். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்