அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அடுத்த மாதம் சிங்கப்பூர் வரக்கூடும் எனத் தகவல் வெளி யாகியுள்ளது. சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12ஆம் தேதி டிரம்ப்-கிம் இடை யிலான உச்சநிலைச் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட் டது. பின்னர், அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்படுவதாக அமெ ரிக்கா அறிவித்தது.
ஆயினும், அமெரிக்காவுடன் பேச்சு நடத்த எப்போதும் தயார் என்று வட கொரியா அறிவித்தது. அதிபர் டிரம்ப் இதை வரவேற்றார். இதையடுத்து, திட்டமிட்டபடி உச்சநிலைச் சந்திப்பை நடத்துவது தொடர்பில் இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே திரு மூனின் சிங்கப்பூர் வருகை தீர்மானிக்கப் படும் என்று தென்கொரிய அர சாங்க அதிகாரி ஒருவர் சொன்ன தாக யோன்ஹப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

