தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிடுவதில் மகாதீர் உறுதி

1 mins read
a109259c-da21-4da0-8fd7-ef99ad279288
-

சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக் கும் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தைக் கைவிடுவதில் தாம் உறுதியாக இருப்பதாக மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள் ளார். அதிவேக ரயில் திட்ட உடன் பாட்டைக் கைவிடுவது தொடர் பில் சிங்கப்பூருடன் பேச்சு நடத் தப்படும் என்று 'ஃபைனான் சியல் டைம்ஸ்' இதழுக்கு அளித்த நேர்காணலில் டாக்டர் மகாதீர் கூறியிருக்கிறார். இம்மாதம் நடந்த மலேசியப் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வெற்றி பெற்று, 92 வயதான டாக்டர் மகாதீரின் தலைமையில் ஆட்சி அமைத்தது.

பிரதமராகப் பதவியேற்றதும் நாட்டின் கடன் சுமையைக் குறைக்க முன்னுரிமை அளிக்கப் படும் என்றும் திரு நஜிப் ரசாக் தலைமையிலான முந்தைய அரசாங்கம் கையெழுத்திட்ட பெருந்திட்டங்கள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் டாக்டர் மகாதீர் தெரிவித்திருந்தார். "அதிவேக ரயில் திட்டம் போன்ற தேவையில்லாத திட்டங் களைக் கைவிட வேண்டியது அவசியம். 110 பில்லியன் ரிங்கிட் (S$37 பில்லியன்) மதிப்பிலான அத்திட்டத்தால் மலேசியா ஒரு காசுகூட லாபம் ஈட்ட முடியாது. அது கைவிடப்படவேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.

மேலும்