பெட்டாலிங் ஜெயா: இவ்வாண் டின் நோபல் பரிசுக்கு பிரதமர் மகாதீரின் பெயரை முன் மொழிய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது பற்றி டாக்டர் மகாதீ ரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்குப் பதில் அளித்த அவர், "அந்த அளவுக்கு நான் உயர்ந்தவன் அல்ல," என்றார். திங்கள்கிழமை நடைபெற்ற மலேசிய பிரிபூமி பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட் டத்தில் பங்கேற்ற பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். "நோபல் பரிசா, நான் அவ் வளவு உயர்ந்தவன் கிடை யாது," என்றார் மகாதீர்.
change.org என்ற இணையப் பக்கத்தில் டாக்டர் மகாதீரின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யும் மனு பதிவு செய்யப் பட்டுள்ளது. படம்: Change.org (அலெக்சாண்டிரியா அபிஷேகம்)

