'மாமன்னருடன் திருமணம் என்பது பொய்யான செய்தி'

'மாமன்னருடன் திருமணம் என்பது பொய்யான செய்தி'

1 mins read
47b4d19b-c799-4208-aad0-552a11def919
-

பெட்டாலிங் ஜெயா: மாமன்னர் 5வது முஹம்மட்டை மணக்கப்போவதாக சமூக ஊடகங்களில் தன்னைப் பற்றி பரவும் செய்தி போலியானது என்று அன்வார் இப்ராஹிமின் மகளும் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் உதவி தலைவருமான நூருல் இஸ்ஸா அன்வார் தெரிவித் துள்ளார். கடந்த திங்கட்கிழமை வாட்ஸ்ஆப் மூலம் தொடர்புகொண்டபோது அந்தச் செய்தியை மறுத்த அவர், "இதைவிட முக்கிய பணிகள் பல காத்திருக்கின்றன," என்றார்.

"போலிச்செய்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார். மலேசியாவின் பொருளியலைக் காப்பாற்றுவது உட்பட முக்கிய பணிகளில் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்," என்று நூருல் இஸ்ஸா கூறினார்.

மாமன்னரை மணக்கப்போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை நூருல் இஸ்ஸா மறுத்துள்ளார். படம்: இணையம்