ஏர்ஏ‌ஷியா அலுவலகங்களில் சோதனை

1 mins read
2435325c-add5-4303-a714-19649aaf28b9
-

புதுடெல்லி: மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஏ‌ஷியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான டோனி ஃபெர் னாண்டஸ் மீது இந்தியாவில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனைத்துலக விமான சேவைக்கான உரிமத்தைப் பெறுவதற்கு அவர் விதிமுறைகளை மீறியுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டுக் கழகத்தின் விதி முறைகளையும் அவர் மீறி உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது.

முதல் தகவல் அறிக்கையில் மலேசியாவின் ஏர்ஏ‌ஷியா குழு மத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் தவிர 'டிராவல் ஃபுட்' உரிமையாளர் சுனில் கபூர், ஏர்ஏ‌ஷியா இயக்குநர் ஆர். வெங்கட்ராமன், விமானத் துறை ஆலோசகர் தீபக் தல்வார், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட எஸ்என்ஆர் டிரேடிங் இயக்குநர் ராஜேந்திர துபே, அடையாளம் தெரியாத பொதுச் சேவை ஊழியர் ஒருவர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும்