சிங்கப்பூரில் அமெரிக்க, வடகொரிய அதிகாரிகள்

சிங்கப்பூரில் அமெரிக்க, வடகொரிய அதிகாரிகள்

1 mins read
e20557f4-f309-4d1a-883b-ea8c6b1b71d5
-

அமெரிக்க, வடகொரிய தலை வர்களுக்கு இடையிலான உச்ச நிலைச் சந்திப்பை திட்டமிட்டபடி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின் றன. அதன் ஒரு பகுதியாக வடகொரியத் தலைவரின் உயர் மட்ட உதவியாளர் நேற்று முன் தினம் இரவு சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். கிம் சாங் சோன் எனப்படும் அவர் வடகொரிய அரசாங்க அலுவலர்களின் தலைமை அதி காரி என்று குறிப்பிடப்படுகிறார். சீனத் தலைநகர் பெய்ஜிங் வழியாக அவர் சிங்கப்பூர் வந்து சேர்ந்து உள்ளார். அதே சமயம் அமெரிக்க அரசாங்க அதி காரிகள் அடங்கிய குழு ஒன்றும் ஜப்பானின் யுஎஸ் யகோட்டா விமானத் தளத்திலிருந்து நேற்று முன்தினம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டதாக 'என்ஹெச்கே' எனப் படும் ஜப்பான் அரசாங்க ஒலி பரப்பு தெரிவித்தது.