கியவ்: உக்ரேனில் தஞ்சம் அடைந்திருந்த ரஷ்யாவைச் சேர்ந்த செய்தியாளரான 41 வயது ஆர்கடி பாப்சென்கோவை செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத ஒருவர் சுட்டுக்கொன்றதாக உக்ரேனியப் போலிசார் தெரிவித்தனர். உக்ரேன் தலைநகர் கியவ்வில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை போலிசார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 2016ஆம் ஆண்டு ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது பற்றி பாப்சென்கோ, பத்திரிகை ஒன்றில் செய்தி வெளி யிட்டதற்காக அவருக்கு கொலை மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அவர் ரஷ்யாவிலிருந்து வெளியேறி உக்ரேனில் வசித்து வந்ததாகக் கூறப்பட்டது. பாப்சென்கொ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் ரஷ்யா இருப்பதாக உக்ரேனியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய செய்தியாளர் உக்ரேனில் சுட்டுக்கொலை; ரஷ்யா மீது குற்றச்சாட்டு
1 mins read

