புதிய ஆதாரம் கிடைத்தால் விமானத்தை மீண்டும் தேடுவோம்

புதிய ஆதாரம் கிடைத்தால் விமானத்தை மீண்டும் தேடுவோம்

1 mins read
72d7525f-a394-41db-baa8-81b049056bd2
-

கோலாலம்பூர்: மலேசியாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமற்போன எம்எச்370 விமானத்தை தேடும் பணி இந்த வாரம் முடிவுக்கு வருவதாக மலேசிய அரசாங்கம் அறிவித் திருந்த நிலையில் புதிய ஆதாரங் கள் கிடைத்தால் விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். "இதுவரை எந்த ஆதாரமுமே கிடைக்கவில்லை. கிடைக்காத ஒன்றுக்காக தொடர்ந்து தேடிக் கொண்டிருக்க முடியாது என்ப தற்காக விமானத்தைத் தேடும் பணியை முடிவுக்கு கொண்டுவர தாங்கள் தீர்மானித்ததாக திரு மகாதீர் செய்தியாளர்களிடம் கூறினார்.

காணாமற்போன அந்த விமானத்தின் பாகங்கள் கிடைத்ததாக யாரேனும் தகவல் கொடுத்தால் அந்த விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்குவது குறித்து புதிய அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் பிரதமர் கூறினார். ஆனால் தற்போதைக்கு விமானத்தைத் தேடும் பணி நிறுத்தப்படுவதாக அவர் சொன்னார்.

புத்ராஜெயாவில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது மற்றும் துணைப் பிரதமர் வான் அசிஸாவும் செய்தியாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்