சோல்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் வலது கரமான ஜெனரல் கிம் யோங் சோல் புதன்கிழமை நியூயார்க்கில் அமெரிக்க வெளியுறவு அமைச் சர் மைக் பொம்பியோவைச் சந்தித்து வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த டிரம்ப்-கிம் ஜோங் உன் சந்திப்பு குறித்து பேசினார். இருபது ஆண்டு களுக்குப் பிறகு வடகொரி யாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்கு வருவது இதுவே முதல்முறை.
சிங்கப்பூரில் நடைபெறும் ஜூன் 12ஆம் தேதி சந்திப்பை அமெரிக்க அதிபர் ரத்து செய் தாலும் திட்டமிட்டப்படி அந்தச் சந்திப்பை நடத்துவதற்கான ஏற் பாடுகளை இருதரப்பு அதிகாரி களும் செய்து வருகின்றனர். புதன்கிழமை மாலை ஐநா தலைமையகத்துக்கு அருகே யுள்ள கட்டடத்துக்கு திரு பொம்பியோவும் ஜெனரல் கிம் மும் தனித்தனியாக வந்தனர்.
நியூயார்க்கில் ஜெனரல் கிம். படம்: ஏஎஃப்பி

