புத்ராஜெயா: இந்தோனீசிய பய ணத்தை முடித்துக்கொண்டு மலே சியா வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புத்ராஜெயாவில் பிரதமர் மகாதீரைச் சந்தித்தார். நேற்று காலை 11.35 மணி யளவில் பிரதமர் அலுவலகத்துக்கு வந்த மோடியை பிரதமர் மகாதீர் வரவேற்றார். அண்மைய பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றதைப் பாராட்டி தமது தனிப் பட்ட வாழ்த்துகளைத் தெரிவிப்பதற் காக திரு மோடி மலேசியா வந்துள் ளார். இதற்கு முன்பு 2015 நவம்பர் 23ஆம் தேதி அன்று திரு மோடி மலேசியா வந்துள்ளார். இருப்பினும் இரு தலைவர்களும் சந்திப்பது இதுவே முதல் முறை.
துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் அவரது கணவர் அன்வார் இப்ராகிம் ஆகியோரையும் திரு மோடி சந்தித்தார். படம்: மலேசிய தகவல் பிரிவு

