கோலாலம்பூர்: மலேசியாவையும் சிங்கப்பூரையும் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் பலர் நேற்று புத்ர ஜெயாவில் சந்தித்து 1எம்டிபி விவகாரம் குறித்து பேசினர். அப்போது அரசாங்க முதலீட்டு நிறுவனமான '1எம்டிபி'யின் முறை கேடான பரிவர்த்தனையில் இழக் கப்பட்ட பணத்தை மீட்கும் நடவ டிக்கையில் ஒத்துழைப்பை வழங்க இரு குழுவினரும் இணக்கம் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சிங்கப்பூரில் ஆதாரங்களைத் திரட்டவும் சாட்சியாளர்களைக் கண்டுபிடிக்கவும் இரு நாடுகளும் சேர்ந்து செயல்படும் என்று மலேசிய பணிக் குழு தெரிவித்தது.
1எம்டிபி விவகாரத்தை விசாரிக்கும் மலேசிய விசாரணை அதிகாரிகள் நேற்று கோலாலம்பூரில் சிங்கப்பூரைச் சேர்ந்த அதிகாரிகளை சந்தித்தனர். படம்: 1எம்டிபி சிறப்பு பணிக்குழு

