மலேசியாவில் பயங்கரவாத சந்தேக நபர்கள் 15 பேர் கைது

மலேசியாவில் பயங்கரவாத சந்தேக நபர்கள் 15 பேர் கைது

1 mins read
eea5c5f3-aad7-486f-bb68-f1b1b11b0c95
-

கோலாலம்பூர்: பயங்கரவாத சந்தேகப் பேர்வழிகள் 15 பேரை மலேசியப் போலிசார் கைது செய் துள்ளனர். கோலாலம்பூரிலும் சிலாங்கூர், ஜோகூர், கிளந்தான், சாபா ஆகிய நான்கு மாநிலங் களிலும் போலிசார் மேற்கொண்ட அதிரடி சோதனை களின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலிஸ் படைத் தலைவர் முகமட் ஃபுஸி ஹருன் கூறினார். கைது செய்யப்பட்டர்களில் ஒரு மாணவரும் ஒரு மாதும் அடங்குவர் என்றும் அவர் சொன்னார்.

மே 9 ஆம் தேதி சிலாங்கூர், பூச்சோங்கில் கைது செய்யப்பட்ட 51 வயது மாது, மலேசியாவில் நடந்துமுடிந்த தேர்தல் நாளன்று வாக்களிப்பு நிலையத்தில் காத்திருந்த முஸ்லிம் அல்லாத மக்கள் மீது காரை மோதத் திட்டமிட்டிருந்ததாக நம்பப்படுகிறது என்று திரு முகமட் ஃபுஸி கூறினார்.

பயங்கரவாதக் கும்பல்களுடன் தொடர்பு உடையவர்கள் என்று சந்தேகிக் கப்பட்ட 15 பேரை மலேசியப் போலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 17 வயது மாணவன், 51 வயது மாதும் அடங்குவர் என்று போலிஸ் படைத் தலைவர் கூறினார். அந்த மாணவனும் அந்த மாதும் மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்ட மிட்டிருந்ததாக நம்பப்படுகிறது என்று திரு முகமட் ஃபுஸி கூறினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும்