ஜகார்த்தா: சுரபாயாவில் சென்ற மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் 37 சந்தேக நபர்களை இந்தோனீசியப் போலிசார் கைது செய்துள்ளதாக போலிஸ் படைத் தலைவர் டிட்டோ கர்னாவியன் கூறினார். மேலும் நான்கு சந்தேகப் பேர்வழிகளை போலிசார் கைது செய்ய முயன்றபோது கைது செய்யவிடாமல் போலிசாரை எதிர்த்து நின்றதைத் தொடர்ந்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அவர் சொன்னார். இந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபாயாவில் கடந்த மே 13ஆம் தேதி மூன்று தேவாலயங்கள் மீது பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு மறுநாள் உள்ளூர் போலிஸ் நிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
சுரபாயா தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்கள் 37 பேர் கைது
1 mins read

