'கிம் ஜோங் உன்னின் ஹோட்டல் செலவை சிங்கப்பூர் ஏற்கக்கூடும்'

'கிம் ஜோங் உன்னின் ஹோட்டல் செலவை சிங்கப்பூர் ஏற்கக்கூடும்'

1 mins read

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்ய அவ்விரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் அல்லும் பகலும் உழைக்கின்றனர். இருந்த போதும் திரு கிம்மின் ஹோட்டல் வசதிக்கு யார் கட்டணம் செலுத்தப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ரொக்க நிதி அவ்வளவாக இல்லாத வடகொரியா, மதிப்பு மிக்க வரவேற்பை எதிர்பார்ப்பதாக 'தி வா‌ஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் தெரிவித்துள்ளது. திரு கிம், சிங்கப்பூர் நதிக்கு அருகிலுள்ள 'தி ஃபுல்லர்ட்டன்' சொகுசு ஹோட்ட-லில் தங்க வடகொரியா விரும்புகிறது. அந்த ஹோட்டலில் தங்குவதற்கான கட்டணம், ஓர் இரவுக்கு 8,000 வெள்ளிக்கும் அதிகம்.

மேலும்