காசா எல்லைப் பகுதியில் பாலஸ்தீனர்களின் ஆர்ப் பாட்டங்கள் நீடிக்கும் நிலையில் இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் பாலஸ்தீன தாதி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலியத் தாக்குதலில் காயம் அடைந்த ஒருவருக்கு உதவச் சென்ற 21 வயது ரஸான் அல் நஜார் என்ற தாதி, இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீன தாதி ஒருவர் பலி
1 mins read

