அண்டை நாடுகளை அச்சுறுத்தும் சீனா

அண்டை நாடுகளை அச்சுறுத்தும் சீனா

1 mins read

சிங்கப்பூர்: தென்சீனக் கடல் விவகாரத்தில் பக்கத்து நாடுகளை அச்சுறுத்தும் வகையில் சீனா நடந்து கொள்வதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் குற்றம் சாட்டியுள்ளார். வலுக்கட்டாயமாக ஒன்றைச் செய்யுமாறு அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நாடுகளை சீனா நெருக்குவதாகவும் திரு மேட்டிஸ் குறிப்பிட்டார்.

தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை சீனா நிலை நிறுத்தி வருவதாகவும் அவர் சொன்னார். சிங்கப்பூரில் ஷங்ரிலா ஹோட்டலில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அவர், சீனா வின் நடவடிக்கைகள் அதன் நோக்கங்களைக் கேள்விக்கு உள்ளாக்குவதாகக் கூறினார். கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள், நிலத்திலிருந்து வான் நோக்கி சென்று தாக்கும் ஏவுகணைகள், மின் கருவிகளைச் செயலிழக்க வைக்கும் கருவி ஆகியவற்றைச் சீனா தென்சீனக் கடலின் பல்வேறு பகுதிகளில் நிறுவியுள்ளதாக அவர் சொன் னார். ஆசிய பசிபிக் வட்டாரத்தில் அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாடு தொடரும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும்