பெட்டாலிங் ஜெயா: மலேசி யாவுக்கு 80,000 பங்ளாதேஷ் ஊழியர்களை கொண்டு வருவது தொடர்பில் அமின் என்பவரை தாம் சந்தித்ததாகக் கூறப்படு வதை மலேசிய உள்துறை அமைச் சர் முஹைதீன் யாசின் மறுத் துள்ளார். தனிப்பட்ட அந்த நபரை தமக்குத் தெரியாது என்றும் அவர் சொன்னார். இதன் தொடர்பில் ஆலோ சனை நடந்ததா என்பதும் தெரி யாது என்றார் அவர். "பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு 80,000 பங்ளாதேஷ் ஊழியர்களை மலே சியாவுக்குக் கொண்டு வருவதற் கான தனிநபர் ஒருவரின் விண் ணப்பத்தை அமைச்சு அங்கீ கரித்ததாகக் கூறப்படுகிறது.
மலேசிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின், மலேசியாவுக்கு 80,000 பங்ளாதேஷ் ஊழியர்கள் கொண்டுவருவது குறித்து விளக்கம் கேட்டுள்ளதாகத் தெரிவித்தார். படம்: த ஸ்டார் ஆன்லைன்

