திமிங்கலம் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் பைகள்

1 mins read
21582eec-117e-4d4f-a632-b4eeb4c35fdc
-

தாய்லாந்தில் உள்ள சோங்லாவில் ஒரு திமிங்கலம் 80 கிலோவுக்கு மேல் பிளாஸ்டிக் பைகளை விழுங்கிவிட்டது. இறந்து கிடந்த திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து கிலோ கிலோவாக பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்பட்டன. இதே பகுதியில் நோய் வாய்பட்டிருந்த மற்றொரு குட்டி திமிங்கலத்தையும் தாய்லாந்து கடற்துறை உயிரியல் அதிகாரிகள் மீட்டனர். ஆனால் சிகிச்சை அளித்தும் அது உயிர் பிழைக்கவில்லை. பிரேதப் பரிசோதனையில் அதன் வயிற்றில் 80 பிளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளின் மொத்த எடை 8 கிலோ. உலகில் பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்தி வரும் ஆபத்துகளை திமிங்கலத்துக்கு ஏற்பட்ட அவலம் விளக்குகிறது. படம்: ராய்ட்டர்ஸ்

மேலும்