மாஸ்கோ: வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவுக்கு வருகை அளிக்குமாறு வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் புட்டின் அழைப்பு விடுத்திருப்பதாக மாஸ்கோ தகவல்கள் கூறின. சென்ற வாரம் வடகொரியாவுக்கு சென்றிருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவ், திரு புட்டின் கொடுத்தனுப்பிய கடிதத்தை திரு கிம்மிடம் கொடுத்தார். ரஷ்யாவில் பொருளியல் மாநாடு நடைபெறும் சமயத்தில் அங்கு வருகையளிக்குமாறு கிம்மிற்கு திரு புட்டின் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் போக்கு தணிய இந்தச் சந்திப்பு வழிவிடும் என்று தெரிகிறது.
ரஷ்யா வருமாறு வடகொரியத் தலைவருக்கு புட்டின் அழைப்பு
1 mins read

