மகாதீர்: அம்னோ தலைவர் பதவிக்கு கைரி ஜமாலுதின் சிறந்த வேட்பாளர்

மகாதீர்: அம்னோ தலைவர் பதவிக்கு கைரி ஜமாலுதின் சிறந்த வேட்பாளர்

1 mins read

கோலாலம்பூர்: அம்னோவை வழிநடத்த, அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கைரி ஜமாலுதின் சிறந்த வேட்பாளர் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் கூறியுள்ளார். அது பற்றி அவர் விரிவாகக் கூறாமல், அம்னோ கட்சி தற்போது குழப்பத்தில் காணப்படுவதால், அதனை முன்னின்று வழிநடத்த கைரி தகுதியானவர் என்று தான் கருதுவதாக பக்கத்தான் ஹரப்பான் தலைவரான டாக்டர் மகாதீர் தெரிவித்தார். கடந்த மே 22ஆம் தேதி அம்னோவின் இடைக்காலத் தலைவர் அஹ்மட் சைட் ஹமிடி, இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள அம்னோ கட்சித் தேர்தலில், தலைவர், துணைத் தலைவர், உதவித் தலைவர்கள் உட்பட அனைத்துப் பதவிகளுக்கும் யார் வேண்டுமானாலும் சுதந்திரமாகப் போட்டியிடலாம் என்று அறிவித்திருந்தார்.

மேலும்