குவாட்டமாலா சிட்டி: குவாட்டமாலாவில் உள்ள ஃபியுகோ எரிமலை வெடித்து குமுறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய தீக்குழம்பு ஒரு கிராமத்தையே அழித்து விட்டதாக தேசிய பேரிடர் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த எரிமலையின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. அந்த எரிமலை கக்கும் புகையும் சாம்பலும் பல கிலோ மீட்டர் உயரத்திற்கு பரவி இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அந்த எரிமலை தொடர்ந்து கரும் புகையை கக்கி வருவதால் குவாட்டமாலா நகரத்திலுள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. தேசிய அளவில் அவசர நிலை
குவாட்டமாலாவில் எரிமலை வெடிப்பு: உயிரிழப்பு அதிகரிப்பு
1 mins read

