மாஸ்கோ: ஐரோப்பிய ஒன்றியத்தை பிளவுபடுத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு என்றுமே இருந்ததில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு திரு புட்டின் மாஸ்கோ வில் செய்தியாளர்களிடம் பேசினார். ஒன்றுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தையே ரஷ்யா விரும்பு கிறது. ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சிறந்த பொருளியல் மற்றும் வர்த்தகப் பங்காளி நாடாக விளங்குகிறது. எனவே, ஐரோப்பிய ஒன்றியத்தை பிளவுபடுத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு என்றுமே இருந்ததில்லை என்று திரு புட்டின் கூறினார்.
புட்டின்: ஐரோப்பாவை பிளவுபடுத்தும் எண்ணமில்லை
1 mins read

