70 பி. டாலர் அமெரிக்கப் பொருட்களை வாங்கும் சீனா

1 mins read

வா‌ஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டால் 70 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அமெரிக்கப் பொருட்களை வாங்க விருப்பதாக சீனா முன்வந்துள்ளது. இதனை அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பெய்ஜிங்கில் சென்ற வார இறுதியில் அமெரிக்கக் குழுவினருடன் வர்த்தகப் பேச்சு நடத்தியபோது சீனாவில் உயர் பொருளியல் ஆலோசகர் லியு சீனாவின் விருப்பத்தை தெரிவித்ததாக வால் ஸ்திரீட் ஜெர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25 விழுக்காடு வரை வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்