சுவீடன்: தாக்குதலில் ஈடுபட்ட ஆடவருக்கு ஆயுள் தண்டனை

சுவீடன்: தாக்குதலில் ஈடுபட்ட ஆடவருக்கு ஆயுள் தண்டனை

1 mins read

ஸ்டாக்ஹோம்: சுவீடனில் சென்ற ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஒரு லாரியை கூட்டத்தினர் மீது மோதி ஐந்து பேரைக் கொன்ற உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 40 வயது ரஹ்மாட் அகிலோவ் என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகரில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு அவரது அனுதாபத்தை வெளிப் படுத்தியிருந்தார். 2014ஆம் ஆண்டு உஸ்பெக் கிஸ்தானிலிருந்து அவர் சுவீடன் வந்ததாகவும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு அங்கு குடியுரிமை மறுக்கப்பட்டதாகவும் கூறப் பட்டது. சுவீடனைவிட்டு வெளி யேற நான்கு வாரங்கள் இருந்த நிலையில் அவர் தலைமறைவானதாக போலிசார் கூறினர்.

மேலும் செய்திகள்