புத்ராஜெயா: 1எம்டிபி மோசடி விவகாரம் தொடர்பாக தொழில் அதிபரான ஜோ லோ என்றழைக் கப்படும் லோ தெக் ஜோவைக் கைது செய்ய மலேசியா முயன்று வருவதாக அந்நாட்டுப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது நேற்று தெரிவித்தார். ஜோ லோ எந்த நாட்டில் ஒளிந்திருக்கிறார் என்பது குறித்து தமக்குத் தெரியும் என்றார் அவர். ஆனால் ஜோ லோ எந்த நாட்டில் இருக்கிறார் என்பது குறித்து டாக்டர் மகாதீர் தெரிவிக்கவில்லை.
குற்றவாளி எனக் கோரும் நபரைக் கைது செய்து மலேசியா வுக்கு அனுப்பி வைக்கும் உடன் படிக்கையை ஜோ லோ தற்போது இருக்கும் நாட்டுடன் செய்திருக்க வில்லை என்று டாக்டர் மகாதீர் கூறினார். இதன் விளைவாக ஜோ லோவை உடனடியாகக் கைது செய்து மலேசியாவுக்குக் கொண்டு வர முடியவில்லை என்றார் அவர்.

