கோலாலம்பூர்: அம்னோவின் அடுத்த கட்சித் தேர்தலில் தேசிய நிலையில் முக்கிய பதவிக்காகப் போட்டியிடப் போவ தில்லை என்று மலேசியாவின் முன்னாள் தற்காப்பு அமைச்சரும் அம்னோ கட்சியின் உதவித் தலைவருமான ஹிஷாமுதீன் உசேன் அறிவித்துள்ளார். அம்னோ உறுப்பினர் என்ற அடிப்படையில் ஜோகூர் மாநிலத் தில் அக்கட்சியை மீண்டும் வலுவடையச் செய்வதே தமது இலக்கு என்றும் அதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அவர் கூறினார். அம்னோ கட்சி 1946ஆம் ஆண்டில் திரு ஹிஷாமுதீனின் தாத்தாவான ஓன் ஜாஃபாரால் நிறுவப்பட்டது.
'கட்சித் தேர்தலில் போட்டியிட மாட்டேன்'
1 mins read

