கோலாலம்பூர்: பொருளியல் விவகாரங்களுக்கான அமைச் சராக நியமிக்கப்பட்ட பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்குக் கூடுதல் அதிகாரங் களை பிரதமர் மகாதீர் வழங்கி இருக்கிறார். அதன் வழி பக்கத்தான் ஹரப்பானில் அஸ்மின் அலியின் பெயர் ஓங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால், மகாதீருக்கு அடுத்து அன்வார் வருவதற்கு இது தடையாக இருக்குமோ எனும் கேள்வி அன்வாரின் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்பு தேசிய முன்னணி ஆட்சியின்போது நிதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் இருந்த பெட்ரோனாஸ், தேசிய கருவூலம், பெட்லா, போன்றவை, அஸ்மின் அலியின் அமைச்சுக்கு கீழ் கண்காணிக்கும் அதிகாரத் தைத் திரு மகாதீர் வழங்கியுள்ளார். அரசியல்வாதி ஒருவருக்கு இது போன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அவரது தகுதி கூடும்.
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய மகாதீர்
1 mins read

