மகாதீர்: பசிபிக் வர்த்தக உடன்பாட்டை மறுஆய்வு செய்யவும்

1 mins read

கோலாலம்பூர்: பசிபிக் நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்து மறு ஆய்வு செய்யுமாறு மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கேட்டுக்கொண்டுள்ளார். அந்த உடன்பாட்டின் தற் போதைய விதிமுறைகளின்படி மலேசியா போன்ற சிறிய பொருளி யல் நாடுகள் பலன் அடைய முடியாது என்று அவர் கூறி யுள்ளார். ஜப்பானிய நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ள பல்வேறு நாடுகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அந்த உடன்பாட்டை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று திரு மகாதீர் வலியுறுத்தினார். சிறிய, நலிந்த பொருளியலைக் கொண்ட நாடுகள் அவற்றின் பொருட்களைப் பாதுகாக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும் செய்திகள்