காசா எல்லையில் இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல்

1 mins read
4efdaed9-d7ec-46c3-bc61-02e0802479d6
-

இஸ்ரேல்- காசா எல்லையில் பாலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டம் நீடிக்கும் வேளையில் அவர்கள் மீது இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அத்தாக்குதலில் பாலஸ்தீனர்களில் பலர் கொல்லப்படுவதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் காசா எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பாலஸ்தீன இளைஞர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட உறவினர்கள் கதறி அழுதனர். இஸ்ரேலியத் தாக்குதல் முடிவுக்கு வர வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்