ஜி7 அமைப்பில் ரஷ்யாவை சேர்க்க டிரம்ப் கோரிக்கை

1 mins read
e570dea1-d33c-4351-a33b-3dc9f576afdc
-

டொரோன்டோ: ஜி7 எனப்படும் 7 தொழில்வள நாடுகளைக் கொண்ட அமைப்பில் ரஷ்யாவையும் மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டிருப்பது ஜி7 நாடுகளின் தலைவர்களுக்கு வியப்பைக் கொடுத்துள்ளது. 2014ம் ஆண்டு உக்ரேனின் கிரைமியா பகுதியை ரஷ்யா அதனுடன் இணைத்துக் கொண் டதைத் தொடர்ந்து ரஷ்யா இந்த அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஜி7 நாடுகளின் மாநாட்டில் ரஷ்யா பங்கேற்க விரும்புவதாக திரு டிரம்ப் கூறினார்.

ஆனால் ஜி7 அமைப்பில் ரஷ்யாவை மீண்டும் சேர்த்துக் கொள்ளவோ அல்லது அந்த மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள் வதையோ ஜி7 அமைப்பில் இடம் பெறும் மற்ற நாடுகளின் தலைவர் கள் விரும்பவில்லை என்று ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் நடந்த ஜி7 நாடுகளின் மாநாட்டில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மெக்ரோன் உட்பட ஏழு தொழில்வள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்