ஹனோய்: வியட்னாமில் புதிய பொருளியல் வட்டாரங்களை அமைக்கும் அரசாங்கத்தின் திட் டத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களை அந்நாட்டின் போலிசார் தடுத்து நிறுத்தியுள் ளனர். சீன முதலீட்டாளர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தினால் தலைநகர் ஹனோ யிலும் இதர முக்கிய நகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. கடந்த ஆண்டு மே மாதத்தில் மூன்று பொருளியல் வட்டாரங் களை அமைக்கும் திட்டத்தை வியட்னாம் அரசு வெளியிட்டது. இப்புதிய பொருளியல் வட் டாரங்கள் குறைந்த கட்டுப்பாடு களுடன் அதிக முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என்றும் அது கூறி யிருந்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார் என்ற விவரத்தை அரசு வெளியிடாத நிலையில் 99 ஆண்டுகள் குத்தகை என்ற அடிப்படையில் நிலங்கள் வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டது.

