ஆக வயதான முதல் அதிபர்

ஆக வயதான முதல் அதிபர்

1 mins read
d5712125-67b1-40ed-beae-056ba0222219
-

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கு நேற்று 72 வயதானது. கனடாவில் 'ஜி7' கூட்டத்தை முடித்துக் கொண்டு இருபது மணி நேர பயணத்துக்குப் பிறகு சிங்கப்பூர் வந்து வரலாற்றுச் சிறப்புவாய்ந்த வடகொரியத் தலை வருடனான சந்திப்பையும் வெற்றி கரமாக முடித்து வா‌ஷிங்டன் அர சியலுக்கு அதிபர் டிரம்ப் திரும்பி யுள்ளார். சிங்கப்பூரில் இருந்தபோதே அவரது பிறந்த நாள் முன்கூட்டியே கொண்டாடப்பட்டது. இந்நிலையில் 72வது வயதை நேற்று எட்டிப்பிடித்த அதிபர் டிரம்ப், அமெரிக்க வரலாற்றில் ஆக வயதான முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன் முன்னாள் அதிபர் ரோனால்ட் ரீகனும் 73வது வயதில் அதிபராக இருந்துள்ளார். ஆனால் ரீகன் 1984ல் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட் டவர். திரு டோனல்ட் டிரம்ப் முதல் தவணைக் காலத்திலேயே 72 வயதை எட்டிப் பிடித்தவர். டிரம்ப்பின் உடல்நிலை, மன நிலை இரண்டும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். கடந்த 2015ல் டிரம்ப்பின் சார்பில் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் அவரது ரத்த அழுத்தம் நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டது.

சிங்கப்பூரில் இருந்தபோது பிறந்த நாள் கேக் வெட்டிய அதிபர் டிரம்ப். கோப்புப் படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

மேலும் செய்திகள்