'தேசிய முன்னணி கலைக்கப்பட வேண்டும்'

'தேசிய முன்னணி கலைக்கப்பட வேண்டும்'

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவை 61 ஆண்டுகள் ஆட்சி செய்த தேசிய முன்னணி கூட்டணி அண்மைய தேர்தலில் தோல்வியடைந்தது. இதனால் அந்தக் கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி யுள்ளது. இந்நிலையில் தேசிய முன்னணி கூட்டணியைக் கலைக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள் ளது. அம்னோ கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இந்த வேண்டு கோளை விடுத்துள்ளனர். அம்னோ மூத்த தலைவர்கள் மன்றத்தின் தலைமைச் செயலாள ரான முஸ்தபா யாக்கூப், "அம்னோ, மலேசிய இந்தியர் காங்கிரஸ், மலேசிய சீனர் காங்கிரஸ் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய தேசிய முன்னணியில் இனி கூட்டணி உணர்வை எதிர்பார்க்க முடியாது," என்றார்.

கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்தைக் கூட்டி கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதானக் கட்சியான அம்னோவை அவர் கேட்டுக்கொண்டார். சரவாக் மாநிலத்தில் தேசிய முன்னணியில் அங்கம் வகித்த நான்கு கட்சிகள் பிரிந்து சென்றதை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் செய்திகள்