மகாதீருக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி

மகாதீருக்கு ஏற்பட்ட முதல் அதிர்ச்சி

1 mins read

பெட்டாலிங் ஜெயா: மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர், தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசாங்க அலுவலகத்துக்குள் முதல் முறையாக நுழைந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியை நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார். புத்ராஜெயாவில் ஏராளமான ஆவணங்கள் கிழித்துப் போடப் பட்டிருந்ததாகவும் கணினிகளை இயக்க முடியாமல் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

"தாள்களை வெட்டும் இயந் திரத்தின் மூலமாக ஆவணங்கள் வெட்டிப் போடப்பட்டிருந்தன. கணினிகளை இயக்க முடிய வில்லை," என்று புத்ராஜெயாவில் நுழைந்த அனுபவம் பற்றி டாக்டர் மகாதீர் தெரிவித்தார். "அலுவலகம் முழுவதும் குப்பை சேகரிக்கும் பைகளில் கிழித்துப் போடப்பட்ட ஆவணங் கள் மூட்டை மூட்டையாகக் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. அரை குறையாகச் சாப்பிட்டு போடப்பட்ட உணவுகள் அங்கிருந்தவர்கள் அவசரகதியில் ஓடியிருப்பதைக் காட்டியது," என்றார் அவர்.

மேலும் செய்திகள்: