வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புதல் அளித் துள்ளார். வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் திரு டிரம்ப் இதற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்க பொருட் களுக்குச் சீனாவில் 25 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக் காவில் 2.5% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இது நியாய மான வர்த்தகம் அல்ல என்றும் எனவே சீனாவிலிருந்து இறக்கு மதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்க இருப்பதாகவும் திரு டிரம்ப் முன்பே அறிவித்திருந்தார்.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல்
1 mins read

