கோலாலம்பூர்: முதலீட்டு நிறுவன மான 1எம்டிபியின் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை மேற் கொண்டு வரும் மலேசிய அதி காரிகள், மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது குற்றம் சாட்டுவது குறித்து பரிசீலித்து வருவதாக விசாரணைக் குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கறுப்புப் பணத்தை பயன்படுத்தியது, பிறரின் சொத்து களை தவறாக கையகப்படுத்தி யது ஆகிய குற்றச்சாட்டுகளை திரு நஜிப் எதிர்நோக்கக்கூடும் என்று அத்தகவல் கூறியது.
இத்தகைய குற்றத்திற்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என்று கூறப் படுகிறது. 2009ஆம் ஆண்டு 1எம்டிபி முதலீட்டு நிறுவனத்தை நிறுவிய திரு நஜிப்பின் வங்கிக் கணக்கு களில் அந்நிறுவனத்தைச் சேர்ந்த பல மில்லியன் டாலர் தொகை பட்டுவாடா செய்யப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து திரு நஜிப் மீது பல புகார்கள் கூறப் பட்டன.
1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் திரு நஜிப்பிடம் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

