வடகொரிய ராணுவத் தளபதிக்கு டிரம்ப் மரியாதை வணக்கம்

வடகொரிய ராணுவத் தளபதிக்கு டிரம்ப் மரியாதை வணக்கம்

1 mins read
24db17f8-ed8e-4cc2-b2ae-b85dc8d833d5
-

வா‌ஷிங்டன்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசுவதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சிங்கப்பூர் சென்றிருந்தபோது வடகொரிய ராணுவத் தளபதிக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் விதமாக 'சல்யூட்' செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் நடந்த அந்தத் தருணம் பற்றிய காட்சியை வடகொரிய தொலைக்காட்சி ஒளிபரப்பியதைத் தொடர்ந்து டிரம்ப்பின் செயலை சிலர் குறை கூறியுள்ளனர்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வடகொரிய ராணுவத் தளபதிக்கு அமெரிக்க அதிபர் எதற்காக வணக்கம் செலுத்த வேண்டும் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் வெள்ளை மாளிகை, திரு டிரம்ப்பின் செயலை தற்காத்துப் பேசியுள்ளது. வடகொரிய ராணுவத் தளபதி திரு டிரம்ப்பிற்கு வணக்கம் தெரிவித்ததும் பதிலுக்கு திரு டிரம்ப் வணக்கம் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், வடகொரிய ராணுவத் தளபதியிடம் திரு டிரம்ப்பை அறிமுகம் செய்தார். அப்போது திரு டிரம்ப், அந்தத் தளபதிக்கு வணக்கம் தெரிவித்தார். படம்: வடகொரிய தொலைக்காட்சி

மேலும் செய்திகள்: