பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங், அந்நாட்டு கடற்படை அதன் போர் ஆயத்தநிலையையும் போர் பயிற்சியையும் மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மக்கள் விடுதலை ராணுவ கடற்படை அதன் போர் ஆயத்த நிலையை மேம்படுத்த ஒவ்வொரு நிமிடத்தையும் முழுமையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய ராணுவ கமிஷன் தலைவருமான ஜின்பிங் அறிவுறுத் தினார். சீனாவில் ஷண்டோங் மாநிலத்தில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு திரு ஜின்பிங் கடந்த திங்கட்கிழமை சென் றிருந்தபோது கடற்படை வீரர்களுக்கு அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். சீன கடற்படை புதிய விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
கடற்படைத் திறனை பலப்படுத்தும் சீனா
1 mins read

