பெய்ஜிங்: அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சரியான பதிலடி கொடுக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 34 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையை அமெரிக்க வேளாண் பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் வரும் ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா அறிவித்துள்ளது. அடுத்து நிலக்கரி, எண்ணெய் உட்பட மேலும் 16 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பொருட்களுக்கும் இறக்குமதி வரி வசூலிக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் கூடுதல் வரி விதித்தது. இதற்கு சீன ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா கண்டனம்
1 mins read

