ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உள்ள கலைப் பள்ளிக் கட்டடத்தில் மூண்ட தீயில் அக்கட்டம் பெரும் சேதம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். அக்கட்டடத்தில் மூண்ட தீ பக்கத்தில் உள்ள கட்டடங்களுக்கும் பரவியதாகக் கூறப்பட்டது. வெள்ளிக்கிழமை மூண்ட தீயை அணைக்க சுமார் 50 தீயணைப்பாளர்கள் போராடியதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே பள்ளிக்கூடத்தில் தீ மூண்டதாக தீயணைப்புப் படையைச் சேர்ந்த பேச்சாளர் ஒருவர் கூறினார். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பாளர்கள் தீயை கட்டுப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பை கருத்தில்கொண்டு அருகில் உள்ள கட்டடங்களிலிருந்தும் வீடுகளிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
ஸ்காட்லாந்த்: கிளாஸ்கோ பள்ளியில் தீ
1 mins read
-

