பேரிடர் நிர்வாகம்; மலேசியாவுக்கு உதவ ஜப்பான் தயார்

1 mins read

கோலாலம்பூர்: மலேசியாவுடன் பேரிடர் நிர்வாக நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ள ஜப்பான் முன்வந்துள்ளது. நேற்று நடைபெற்ற சந்திப்பில் இது பற்றி மலேசிய துணைப் பிரதமர் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் மலேசியாவுக்கான ஜப்பானிய தூதர் டாக்டர் மக்கியோ மியாகாவாவும் விவாதித்தனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது டாக்டர் மக்கியோ, "பேரிடர் நிர்வாக தொழில்நுட்பத்தை மலேசியாவுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்," என்றார். "இயற்கை பேரிடர்களைச் சமாளிப்பதில் எங்களுக்கு போதிய அனுபவம் உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.