கிம் மீண்டும் சீனா பயணம்

கிம் மீண்டும் சீனா பயணம்

1 mins read

பெய்ஜிங்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு நேற்று பெய்ஜிங் சென்று சேர்ந்தார். இந்த ஆண்டில் திரு கிம் மூன்றாவது முறையாக சீனா சென்றுள்ளார். வழக்கத்திற்கு மாறாக சீன ஊடகங்கள், திரு கிம் இந்த முறை சீனாவுக்கு பயணம் மேற் கொள்வது பற்றி அறிவித்துள்ளன. திரு கிம் சீனாவில் புதன்கிழமை வரை தங்குவார் என்று ஊட கங்கள் செய்தி வெளியிட்டுள் ளன. இதற்கு முன்பு திரு கிம் பெய்ஜிங் வந்து சென்ற பின்னரே அவர் அங்கு வருகையளித்ததை சீனா உறுதிப்படுத்தியது. திரு கிம்மின் வருகையை முன்னிட்டு பெய்ஜிங்கில் குறிப்பாக திரு கிம்மும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித் து பேசும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாக சீனா அறிவித் துள்ளது.

மேலும் செய்திகள்