80 பேரை ஏற்றிச்சென்ற இந்தோனீசியப் படகு மூழ்கியதில் ஒருவர் மரணம்

80 பேரை ஏற்றிச்சென்ற இந்தோனீசியப் படகு மூழ்கியதில் ஒருவர் மரணம்

1 mins read
3e34583c-e7f2-43cb-ab64-1bff1e347262
-

இந்தோனீசியாவின் வடக்கு சுமத்ராவில் டோபா ஏரியில் ஒரு படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்தப் படகில் 80 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தேடும் பணி தொடர்வதாகவும் அந்த அதிகாரி கூறினார். மோசமான பருவநிலை காரணமாக அப்படகு திங்கட்கிழமை ஏரியில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. டோபா ஏரிக்கரையில் காத்திருக்கும் உறவினர்கள் காணாமற்போனவர்களை நினைத்து கதறி அழுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்