அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 52 இந்தியர்கள் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 52 இந்தியர்கள் கைது

1 mins read

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத மாக நுழைந்ததாக 52 இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியர்கள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களில் பெரும்பான்மையானோர் சீக்கியர் கள் என்று தெரிய வந்துள்ளது. ஓரிகன் மாநிலத்தில் மொத்தம் 123 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக 'ஆசிய பசிபிக் அமெரிக்கன் நெட்வொர்க் ஆஃப் ஓரிகன்' தனது அறிக்கையில் குறிப்பிட்டது. கைது செய்யப்பட்ட அனை வரும் ஷெரிடன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்தியர் களோடு சீனா, நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது. அகதி களாக வந்தவர்களை அமெரிக்க அரசு எல்லையிலேயே மடக்கிப் பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்