மகாதீர் முகம்மது: வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிச் சலுகை

மகாதீர் முகம்மது: வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிச் சலுகை

1 mins read

கோலாலம்பூர்: தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு வரிச் சலுகை நீட்டிக்கப்படலாம் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புகளை நிறுவனங் கள் உருவாக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்த வரிச் சலுகை அளிக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார். நஜீப் பதவியில் இருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட பெருந்திட்டங்களை டாக்டர் மகாதீர் மறு பரிசீலனை செய்து வருகிறார்.

இந்நிலையில், மகாதீரின் இந்த அறிவிப்பு பெருந்திட்டங் களின் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. "மக்களுக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்குவதே எங்களின் நோக்கம். எனவே எங்களால் முடிந்த அளவிற்கு முதலீட்டாளர் களுக்கு நாங்கள் வரிச் சலுகை அளிப்போம். "பத்தாண்டுகளுக்கு அதிக மாகவும் வரிச் சலுகை வழங்க தயாராக உள்ளோம்," என்று டாக்டர் மகாதீர் தெரிவித்ததாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி கூறுகிறது.

மேலும் செய்திகள்