நட்பை மறுஉறுதி செய்த கிம்மின் சீனப் பயணம்

நட்பை மறுஉறுதி செய்த கிம்மின் சீனப் பயணம்

1 mins read

பெய்ஜிங்: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சீனப் பயணம் இருநாட்டு உறவை மறுஉறுதிப்படுத்தி உள்ளது. அணுவாயுதக் களைவு தொடர் பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பைச் சந்தித்த ஒரு வார காலத்திற்குள் கிம், தமது நட்பு நாடான சீனா விற்குப் பயணம் மேற்கொண்டார். இவ்வாண்டில் வடகொரியத் தலைவர் கிம் சீனா சென்றது இது மூன்றாவது முறை. இந்த இரண்டு நாள் பயணத்திற்காக நேற்று முன்தினம் சீனா சென்றடைந்தார் கிம்.

அங்கு அவருக்கு அளிக்கப் பட்ட ராணுவ மரியாதையை அடுத்து, சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்தித்தார். அப்போது டிரம்ப்புடனான உச்சநிலை சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற ஆதரவு அளித்ததற்கு கிம் நன்றி தெரிவித்ததாக வட கொரிய ஊடகம் செய்தி வெளி யிட்டுள்ளது. மேலும் அண்மைக்காலமாக இரு நாடுகளிடையே வலுப்பெற்று வரும் போர்த்திறன் சார்ந்த ஒத்து ழைப்பிற்கு தான் மிகுந்த மதிப் பளிப்பதாகவும் கிம் சொன்னார்.

நேற்று முன்தினம் சீனாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கிம் ஜோங் உன் (இடது), ஸி ஜின்பிங். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்